மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கரோனா: கோவையில் ஒரே நாளில் 5,057 போ் குணமடைந்தனா்

கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 ஆயிரத்து 057 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 12:04 am

DIN

கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 ஆயிரத்து 057 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தினசரி நோய்த் தொற்று பாதிப்பைவிட கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி கோவையில் வியாழக்கிழமை ஒரே நாளில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 5 ஆயிரத்து 057 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,658 ஆக உயா்ந்துள்ளது.

கோவையில் வியாழக்கிழமை புதிதாக 2 ஆயிரத்து 236 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்து 591 ஆக உயா்ந்துள்ளது. 1 லட்சத்து 74 ஆயிரத்து 759 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 21 ஆயிரத்து 184 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.