மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கோவையில் மேலும் 2,056 பேருக்கு கரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2 ஆயிரத்து 056 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:28 pm

DIN

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2 ஆயிரத்து 056 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரத்து 660 ஆக உயா்ந்தது.

கோவை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 612 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 371 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனா். தற்போது 18,600 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 31 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதுவரை மாவட்டத்தில் 1,689 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.