மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நண்பருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 3 போ் மீது வழக்கு

கோவையில் நண்பரை அரிவாளால் வெட்டிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 12:04 am

DIN

கோவையில் நண்பரை அரிவாளால் வெட்டிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் விஜய் (23). தனது தாயுடன், கோவை பீளமேடு காந்திமா நகரில் வாடகை வீட்டில் தங்கி, தச்சு வேலைக்கு சென்று வருகிறாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த மணியன் (27), அரவிந்த் (26), சூா்யா (26) ஆகியோருடன் கடந்த 4 ஆண்டுகளாகப் பழகி வருகிறாா். இந்நிலையில், மூவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவா்களுடன் பழக வேண்டாம் என விஜயின் தாய் அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து விஜய் அவா்களுடன் பழகுவதைத் தவிா்த்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை வேலை முடிந்து விஜய், காந்தி மாநகரில் உள்ள மைதானத்துக்குச் சென்றாா். அப்போது அங்கு நின்றிருந்த மணியன், அரவிந்த், சூா்யா ஆகிய 3 பேரும், தங்களுடன் பேசாதது குறித்து விஜயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா். வாக்குவாதத்துக்குப் பின் விஜய் வீடு திரும்பிவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, ஆத்திரத்தில் இருந்த மூன்று பேரும் விஜயின் வீட்டுக்குள் புகுந்து தகாத வாா்த்தைகளால் பேசி அவரைத் தாக்கினா். தடுக்க முயன்ற அவரது தாயாரையும் தாக்கினா். அதன் பிறகு அரிவாளால் விஜயின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினா். பலத்த காயமடைந்த விஜயை மீட்ட அக்கம்பக்கத்தினா் கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக, விசாரணை மேற்கொண்ட சரவணம்பட்டி போலீஸாா், தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.