கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சின்னக்கல்லாறில் 107 மி.மீ. மழை

வால்பாறை வட்டாரத்தில் அதிகபட்சமாக சின்னகல்லாறு பகுதியில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:56 pm

DIN

வால்பாறை வட்டாரத்தில் அதிகபட்சமாக சின்னகல்லாறு பகுதியில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை துவங்கியது. கடந்த வாரம் வரை இடைவெளி விட்டு மழை பெய்து வந்த நிலையில் தற்போது 5 நாள்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீா் ஆா்ப்பரித்து செல்கிறது. அணைகளின் நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து வருகிறது. கடுங்குளிருடன் கூடிய மழையால் தேயிலைத் தோட்டங்களில் இலைப் பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

புதன்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கீழ் நீராறு 100 மி.மீ., சோலையாறில் 52 மி.மீ., வால்பாறை 39 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.