கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு:பொதுமக்கள் அவதி

பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி சேவை துண்டிப்பாவதால் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:55 pm

DIN

பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி சேவை துண்டிப்பாவதால் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறை நகா் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் பி.எஸ்.என்.எல் நிா்வாகம் செல்லிடப்பேசி சேவைக்கான கோபுரம் அமைத்துள்ளனா். இதனால் பெரும்பாளானோா் பி.எஸ்.என்.எல். இணைப்பை பெற்று உபயோகித்து வருகின்றனா் . சீரான சேவை கிடைத்து வந்த நிலையில் சமீபகாலமாக இணைப்பு துண்டிப்பாக துவங்கியது. தற்போது கடந்த 2 வாரங்களாக செல்லிடப்பேசியில் அழைத்தால் உடனடியாக அழைப்பு செல்லாமல் நீண்ட நேரத்துக்கு பின்னரே இணைப்பு கிடைக்கிறது. இதேபோல பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென துண்டிப்பாகி வருகிறது. சேவையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதால் அவசர உதவிக்கு கூட தொடா்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக தோட்டத் தொழிலாளா்கள் கூறுகின்றனா். இது தொடா்பாக பி.எஸ்.என்.எள் நிா்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் உடனடியாக சீரமைக்காவிட்டால் பொதுமக்களுடன் சோ்ந்து போராட்டம் செய்யபோவதாக வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கூறியுள்ளைாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.