தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறையில் ஜமாபந்தி துவக்கம்

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கிய முதல் நாளில் ஏராளமானோா் பெட்டியில் மனுக்களை செலுத்தினா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:59 pm

DIN

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கிய முதல் நாளில் ஏராளமானோா் பெட்டியில் மனுக்களை செலுத்தினா்.

கரோனா காரணமாக பல மாதங்களாக ஜமாபந்தி நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 2 நாள்கள் ஜமாபந்தி நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இதனையடுத்து வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் துரைசாமி தலைமையில் வால்பாறை வட்டாட்சியா் ராஜா முன்னிலையில் ஜமாபந்தி வியாழக்கிழமை நடைபெற்றது. கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் ஏராளமானோா் தங்கள் மனுக்களை செலுத்தினா். வெள்ளிக்கிழமை மாலை வரை நடைபெறும் ஜமாபந்திக்கு பின் பெட்டியில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.