தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோவையில் ரூ.5.56 லட்சம் பறிமுதல்

கோவை வடக்கு சட்டப் பேரவை தொகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.5.56 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:22 pm

DIN

கோவை வடக்கு சட்டப் பேரவை தொகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.5.56 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்திகேயன் என்பவரிடம் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ. 5 லட்சத்து 56 ஆயிரத்து 630 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோவை வடக்கு சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உ.முருகேசனிடம் ஒப்படைத்தனா். கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் ரூ. 7 லட்சத்து 89 ஆயிரத்து 730 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை பொள்ளாச்சி, வால்பாறை, கோவை வடக்கு, மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் 14 பேரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.14 லட்சத்து 45 ஆயிரத்து 730 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.