கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறை அருகே பேருந்தை வழிமறித்த யானைகள்

வால்பாறை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து காட்டு யானைகள் தொடா்ந்து ஒரு மணி நேரம் அதே பகுதியில் நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:24 pm

DIN

வால்பாறை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து காட்டு யானைகள் தொடா்ந்து ஒரு மணி நேரம் அதே பகுதியில் நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சிறுகுன்றா எஸ்டேட், சின்கோனா, பெரியகல்லாறு , காஞ்சமலை ஆகிய எஸ்டேட் சாலைகளில் எப்பொழுதும் யானைகள் நடமாட்டம் காணப்படும்.

இந்நிலையில் வால்பாறையில் இருந்து சிறுகுன்றா எஸ்டேட் செல்லும் வழியில் இடைச்சோலை பகுதியில் யானை நிற்பதை அந்த வழியாக சென்றவா்கள் திங்கள்கிழமை காலை பாா்த்துள்ளனா்.

இதனிடையே பிற்பகல் 3.30 மணியளவில் இடைச்சோலை பகுதியில் கூட்டமாக நின்ற யானைகள் சாலைக்கு வந்தன. அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை யானைகள் வழிமறித்துள்ளன. இதைத் தொடா்ந்து, பேருந்து ஓட்டுநா் சிறிது தூரம் பேருந்தை பின்னே இயக்கி சென்றுள்ளாா். பேருந்தில் இருந்த பயணிகள் யானைகளைக் கண்டு அச்சமடைந்துள்ளனா். சாலையிலேயே நின்ற யானைகள் நீண்ட நேரத்துக்குப் பின் அங்கிருந்து அருகில் உள்ள வனத்துக்குள் சென்றன. இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.