சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

கமல் பின்னால் இருப்பது பாஜக: நடிகர் மன்சூர் அலிகான்

கமல் பின்னால் பாஜக இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
வேட்புமனுவை தாக்கல் செய்யும் மன்சூர் அலிகான்.
Updated On :18 மார்ச் 2021, 1:19 pm

DIN

கமல் பின்னால் பாஜக இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ்தேச புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தொகுதியில் மிகப்பெரிய பணமுதலைகள், ராட்சஸ பெருச்சாலிகள், ஆண்டவர்கள், ஆண்டுகொண்டு இருப்பவர்கள் போட்டியிடுகின்றனர்.

நான் கமலின் தீவிர ரசிகன், ஆனால் அவர் எனது சிஷ்யனாக கமல் உள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடலாம் என நினைத்தேன். கமலுக்காக தெற்கு தொகுதியை விட்டு கொடுத்து விட்டேன். நான் திண்டுகல்லில் போட்டியிட்டபோது செய்ததை எல்லாம் கமல் இப்போது செய்து வருகிறார். தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பண்பிற்காகவே இந்த தொகுதியில் போட்டியிடுகின்றேன்.

தென்னந்தோப்பு, வாழை எல்லாம் இருப்பதால், பனை, பாக்கு மரம் இருப்பதால் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க இந்த தொகுதியில் நிற்கிறேன். இந்த தொகுதி மக்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக கையெழுத்திட்டு தருகிறேன். ஒரு வருடத்தில் செய்து கொடுக்காவிட்டால் உடனே ராஜினாமா செய்வேன். நான் தனிப்புலி், முன்னும் பின்னும் யாரும் இல்லை. எங்கள் கட்சியில் தொண்டனே தலைவன், தலைவனே தொண்டன். தனியாக சுயேட்சயாக நின்று வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளனர். 

அதிமுகவில் அமைச்சர் வேலுமணி 15 வருசம் எம்.எல்.வாக இருந்து விட்டார். மக்களுக்கு சேவை செய்ய நான் வேலைகேட்டு வந்து உள்ளேன். கமலஹாசன் கால்சீட் கொடுக்காமல் இங்கே வந்து வாக்கிங் போயிட்டு இருக்கிறார். மக்கள் போராட்டத்திற்கு எதில் அவர் தலைமை தாங்கி இருக்கின்றார். கவர்ச்சி அரசியலை வைத்து என்னை முதல்வராக்குங்கள் என்பது முட்டாள்தனம். கமல் பின்னால் இருப்பது யார் என்றால் பா.ஜ.க வின் ஏ முதல் இசட் வரை அனைத்து டீமும் கமல் கட்சிதான் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.