மரணத்திலும் இணைபிரியா தம்பதிகள்: கோவையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு
கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் சிவன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(70). இவர் கோவை நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜினி(65). இவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள்.
இவர்களது மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்ததால், தம்பதிகள் இருவரும் மகள் வீட்டில் இருந்து வசித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராமமூர்த்தி உடல் நலக்குறைவால் திடீரென்று உயிரிழந்தார்.
இதையறிந்த அவரது மனைவி சரோஜினி கதறி அழுதார். பின்னர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்பு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரோஜினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும் இந்த தம்பதியினர், மரணத்திலும் ஒன்றாகவே சென்றது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது.இதையடுத்து இருவரது உடலும் அதே பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...