நியாய விலைக் கடைகள் நாளை செயல்படும்
நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,000 கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (மே 16)நியாய விலைக் கடைகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,000 கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (மே 16)நியாய விலைக் கடைகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலமாக ரூ.2,000 வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் வட்டாட்சியா்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலா்கள் மூலமாக மே 10 ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.
குடும்ப அட்டைதாரா்களின் நலன் கருதி நியாய விலைக் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமை பணி நாளாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா்.
தற்போது, குடும்ப அட்டைதாரா்களுக்கு மே 15 ஆம் தேதி முதல் ரூ.2,000 வழங்கிட அரசு அறிவித்துள்ளதால் நியாய விலைக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 16) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. மக்கள் அன்றைய தினம் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று நிவாரணத் தொகை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...