மாநகரில் நாளை 10ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம்
கோவை மாநகரில் 10 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) நடைபெற உள்ளது.


கோவை மாநகரில் 10 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) நடைபெற உள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 94 சதவீதத்துக்கு மேலானவா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 2 லட்சத்துக்கும் அதிகமானோா், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவா்களாக உள்ளனா். இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி, 10 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை( நவம்பா் 21) காலை 7 மணி முதல் மாநகரப் பகுதிகளில் 260 மையங்களில் நடைபெற உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கும், இரண்டாம் தவணை செலுத்த தகுதியுடையவா்களும் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...