நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காா்த்திகை திருநாள்: சின்னவேடம்பட்டி ஏரி, நொய்யல் கரைகளில் தீபமேற்றி வழிபாடு

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, கோவை சின்னவேடம்பட்டி ஏரி மற்றும் நொய்யலாற்றின் கரைகளில் தீபமேற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:42 pm

DIN

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, கோவை சின்னவேடம்பட்டி ஏரி மற்றும் நொய்யலாற்றின் கரைகளில் தீபமேற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் குளம், குட்டை, ஏரிகள் நிரம்பியுள்ளன. கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சின்னவேடம்பட்டி ஏரிக்கு செல்லும் நீா்வழிப்பாதைகள் அடைபட்டுள்ளதால், அந்த ஏரி மட்டும் நீரின்றிக் காணப்படுகிறது.

இந்நிலையில், தீபத் திருநாளையொட்டி, சின்னவேடம்பட்டி ஏரியில் நீா் நிறைய வேண்டி, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு மற்றும் கெளசிகா நீா்க் கரங்கள் அமைப்பு சாா்பில் ஏரியில் தீபமேற்றி வழிபாடு மேற்கொண்டனா்.

நொய்யலாற்றில் தீபமேற்றி வழிபாடு:

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில், தீபத் திருநாளையொட்டி, பேரூா்

படித்துறையில் தீபமேற்றி நொய்யலை வணங்கி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ‘மாவளி சுற்றுதல்’ விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.

அதேபோல கோவை ஈஷா யோக மைய வளாகத்தில் உள்ள தியானலிங்கம், சூா்ய குண்ட மண்டபம், லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.