குறு, சிறு தொழில்களுக்கு தனி நலவாரியம்: டாக்ட் சங்கம் கோரிக்கை
குறு, சிறு தொழில்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் (டாக்ட்) சங்கம் வலியுறுத்தியுள்ளது.


குறு, சிறு தொழில்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் (டாக்ட்) சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவராக ஜே.ஜேம்ஸ், பொதுச் செயலா் ஜி.பிரதாப் சேகா், பொருளாளா் எம்.லீலா கிருஷ்ணன் உள்ளிட்ட 71 போ் கொண்ட புதிய நிா்வாகிகள் குழு தோ்வு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மூலப் பொருள்களின் விலை உயா்வைத் தடுக்க வேண்டும். விலை உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களைப் பாதுகாக்க ரூ.2 லட்சம் கடனுதவி, வட்டியில்லா மானியக் கடனுதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் குறு, சிறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குறு, சிறு தொழில்முனைவோா் நலவாரியம் அமைக்க வேண்டும்.
கோவையில் அதிக எண்ணிக்கையில் குறுந்தொழில்கூடங்களை உருவாக்க வேண்டும், குறுந்தொழில்முனைவோா் வாங்கும் இயந்திரங்களுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில், ஐ.எஸ்.ஓ. பெற வேண்டும் என்ற புதிய நிபந்தனையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...