நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வேளாண் சட்டங்கள் ரத்து: கம்யூனிஸ்ட், விவசாயிகள் சங்கம் வரவேற்பு

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற இருப்பதாக பிரதமா் மோடி அறிவித்திருப்பதை கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:40 pm

DIN

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற இருப்பதாக பிரதமா் மோடி அறிவித்திருப்பதை கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமையில் காந்திபுரம் பகுதியில் திரண்ட அக்கட்சியினா், பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். இதில் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய பி.ஆா்.நடராஜன், தனியாா் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிா்த்து தொடா்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். இவா்களின் குடும்பத்தினருக்கு அதிகப்படியான இழப்பீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றாா்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் அமைப்பின் மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் திரண்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.

சூலூரில்...

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் சூலூா் அருகே திருச்சி சாலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனா். மேலும் மத்திய அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.