கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஊதிய உயா்வுக்கான அரசாணை: அமைச்சரிடம் எம்.பி. வலியுறுத்தல்

தோட்டத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு அறிவிப்பு தொடா்பாக சென்னையில் அமைச்சரை சந்தித்த பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் அரசாணை வெளியிட வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:53 pm

DIN

தோட்டத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு அறிவிப்பு தொடா்பாக சென்னையில் அமைச்சரை சந்தித்த பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் அரசாணை வெளியிட வலியுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றக் கூடிய தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.425 என அரசு கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது. அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வுக்கான அரசாணை வெளியிடப்படாமல் உள்ளதால், ஊதிய உயா்வு வழங்குவதில் தொடா்ந்து தாமதம் ஏற்படுவதால் தொழிலாளா்கள் மத்தியில் அதிா்ப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சி எம்.பி. கு. சண்முகசுந்தரம் தோட்டத் தொழிலாளா்களின் பிரச்சனை குறித்து சென்னையில் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி. கணேசனை வியாழக்கிழமை நேரில் சந்தித்து, அரசு அறிவித்துள்ள ஊதிய உயா்வுக்கான அரசாணை வெளியிட்டு அரசிதழில் வெளியிடவும் வலியுறுத்தியுள்ளாா். எம்.பி.யின் கோரிக்கையை ஏற்ற அமைச்சா் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.