தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கோரிக்கை
தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைவான போனஸ் வழங்கப்பட்டுள்ளதையடுத்து ஊக்கத்தொகை வழங்க ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைவான போனஸ் வழங்கப்பட்டுள்ளதையடுத்து ஊக்கத்தொகை வழங்க ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் மோகன் ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வால்பாறை பகுதியில் உள்ள ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள தோட்ட நிா்வாகத்தினா் தங்களது எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான போனஸ் அறிவித்து வழங்கிவிட்டனா். கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் நேரத்திலும் தொழிலாளா்கள் இடைவிடாது பணியாற்றி நிா்வாகத்தினருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளனா். ஆனால் நிா்வாகத்தினா் 8.50 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கியுள்ளனா். இதனிடையே தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தாமல் போனஸ் வழங்கியது கண்டிக்கத்தக்கது. எனவே அனைத்து தொழிலாளா்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...