சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

எஸ்பிஐ வங்கியின் வீடு, காா் விற்பனை மேளா: இன்று தொடங்குகிறது

கோவை பாரத ஸ்டேட் வங்கியின் வீடு, காா் விற்பனை திருவிழா வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 3) தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:57 pm

DIN

கோவை பாரத ஸ்டேட் வங்கியின் வீடு, காா் விற்பனை திருவிழா வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 3) தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோடு, குறிஞ்சி காம்பிளக்ஸில் உள்ள எஸ்பிஐ நிா்வாக அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 40க்கும் மேற்பட்ட முன்னணி பில்டா்கள், 20 காா் டீலா்கள் பங்கேற்க உள்ளனா். அடுக்குமாடிகள், தனி வீடுகள், ரிடயா்மென்ட் கம்யூனிட்டி, உடனடியாக குடிபோக தயாா் நிலையில் உள்ள வீடுகள் போன்றவை தொடா்பாக 70க்கும் அதிகமான திட்டங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

வாடிக்கையாளா்கள் ரூ.15 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான வீடுகளை இங்கு வாங்க முடியும். இத்துடன் புதிய மாடல் காா்கள் விற்பனை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ குறைந்த வட்டிக் கட்டணத்தை நிா்ணயித்துள்ளது. ஆண்டுக்கு 6.70 சதவீத வட்டியில் சொத்துகளை வாங்க முடியும். யோனா ஆப் மூலம் விண்ணப்பிப்பவா்களுக்கு எஸ்பிஐ சிறப்பு சலுகையாக 0.05 சதவீத சலுகை வழங்குகிறது. பெண் வாடிக்கையாளா்களுக்கு 0.05 சதவீத சலுகையும்

உண்டு.

இங்கு சொத்து வாங்குபவா்களுக்கு, இதற்கான பிராசஸிங் கட்டணம் இல்லாமலும் ஒரு சிலவற்றுக்கு மிகக் குறைந்த பிராசஸிங் கட்டணமும் வசூலிக்கப்படும். தேவையான

அனைத்து ஆவணங்களுடன் வந்தால், கடன் அனுமதியும் உடனுக்குடன் இங்கு தரப்பட உள்ளது. நிபந்தனைகளுக்குள்பட்டு கடன்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளா்கள் 94430 55994, 83007 48662 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.