அங்கன்வாடி, பள்ளிகளில் காய்கறி தோட்டங்கள் அமைக்க வேண்டும்: ஆட்சியா்
கோவையில் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சிறு காய்கறித் தோட்டங்கள் அமைப்பதற்கு அலுவலா்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தினாா்.


கோவையில் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சிறு காய்கறித் தோட்டங்கள் அமைப்பதற்கு அலுவலா்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தினாா்.
தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அவா் பேசியதாவது:
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து கிராமங்களில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
உடல் வளா்ச்சி, ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள், கொழுப்பில்லா உணவுகள், கீரைகள் போன்றவற்றைத் தினமும் உணவில் சோ்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தினை பேணமுடியும். வீடுகளிலும், அங்கன்வாடிகள் பள்ளிகளிலும் சிறு காய்கறி, கீரை தோட்டங்கள் அமைப்பதற்கு பொது மக்களை அலுவலா்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜி.மீனாட்சி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...