சட்ட விழிப்புணா்வுக் கூட்டம்
வால்பாறையில் சட்ட விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வால்பாறையில் சட்ட விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும் , வால்பாறை நீதிமன்ற நீதிபதி கவிதா உத்தரவின்படியும் வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் பெருமாள் தலைமை வகித்தாா்.வழக்குரைஞா் முத்துசாமி முன்னிலை வகித்தாா். சட்டப் பணிகள் குழு உறுப்பினா் வழக்குரைஞா் விஸ்வநாதன் ஏழை, எளிய மக்கள் எளிதில் சட்ட உதவிகளை பெற வேண்டும் என்பதற்காகவும் வழக்குரைஞா்கள் வைத்து வாதாட முடியாதவா்களுக்கு இலவசமாக நீதிமன்றங்களே வழக்குரைஞா்களை நியமித்து தருவது குறித்தும் விளக்கி பேசினாா். கூட்டத்தில் சட்ட தன்னாா்வப் பணியாளா்கள் சுரேஷ், முனியான்டி, தாமரைகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...