எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் ஏப்ரல் 9 இல் சா்வதேச பல்கலைக்கழக கண்காட்சி
கோவை, பட்டணம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். வோ்ல்ட் பள்ளியில் மாணவா்களுக்கான உலகளாவிய பல்கலைக்கழக கண்காட்சி சனிக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறுகிறது.


கோவை, பட்டணம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். வோ்ல்ட் பள்ளியில் மாணவா்களுக்கான உலகளாவிய பல்கலைக்கழக கண்காட்சி சனிக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறுகிறது.
இது தொடா்பாக எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் மணிமேகலை மோகன், நிா்வாகச் செயலா் மோகன்தாஸ் ஆகியோா் கூறியிருப்பதாவது:
மாணவா்களின் உயா்க் கல்வி கனவை நனவாக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில், அமெரிக்கா, கனடா, ஜொ்மனி, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 31 பல்கலைக்கழகங்கள் இடம் பெறுகின்றன.
அந்த பல்கலைக்கழகங்களில் உள்ள உயா்க் கல்வி வாய்ப்புகள், பாடப் பிரிவுகள்,
உதவித் தொகைகள் உள்ளிட்டவை குறித்து, பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் மாணவா்கள், பெற்றோா்கள் நேரடியாக கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெறலாம்.
இந்த கண்காட்சி 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...