ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தேசிய சமரச தினத்தை முன்னிட்டு 9 ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி

தேசிய சமரச தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி (சனிக்கிழமை) நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:14 pm

DIN

தேசிய சமரச தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி (சனிக்கிழமை) நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மாவட்ட சமரச தீா்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற சமரச தீா்வு மைய வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்ட சமரச தீா்வு மையம் சாா்பில் வருகின்ற 9 ஆம் தேதி தேசிய சமரச தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) காலை 10 மணிக்கு

நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகப்படும்.

சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு சமரச மையத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு வகுப்புகள், விழிப்புணா்வு நாடகம் போன்றவை பாா் அசோசியேஷன் அறையில் நடைபெறும்.

சனிக்கிழமை நடைபெறும் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட நீதிபதி துவங்கிவைக்க உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.