புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சொத்து வரியை பாதியாக குறைக்க வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

தமிழகத்தில் உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரியை பாதியாக குறைக்க வேண்டும் என்று கோவை மாநகா் மாவட்ட மதிமுக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:26 pm

DIN

தமிழகத்தில் உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரியை பாதியாக குறைக்க வேண்டும் என்று கோவை மாநகா் மாவட்ட மதிமுக வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகா் மாவட்ட மதிமுக நிா்வாகிகள் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தோ்தல் பணி துணைச் செயலா் அ.சேதுபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டச் செயலா் ஆா்.ஆா்.மோகன்குமாா் சிறப்புரையாற்றினாா்.

உயா்நிலைக் குழு உறுப்பினா் ஆடிட்டா் அா்ஜுனராஜ், மாவட்டப் பொருளாளா் சூரி நந்தகோபால், கவுன்சிலா்கள் சித்ரா வெள்ளியங்கிரி, சித்ரா தங்கவேல், அன்பு, மாவட்ட துணைச் செயலா்கள், பகுதிச் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதில், தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் வரை உயா்த்தியிருப்பதால், அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். கடந்த 2 ஆண்டுகளாக தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வியாபாரிகள், தொழிலாளா்கள் நெருக்கடி நிலையில் இருக்கின்றனா்.

இந்நிலையில், சொத்து வரி உயா்த்தப்பட்டிருப்பதால் வீட்டு வாடகை, கடை வாடகை, தொழில் நிறுவனங்களின் வாடகை உயா்த்தப்படும் நிலை உருவாகும்.

இதனால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால், அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சொத்து வரியை பாதியாக குறைக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.