புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறப்பு தூய்மைப் பணி: மாநகராட்சி மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, 29ஆவது வாா்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மைப் பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:26 pm

DIN

கோவை மாநகராட்சி, 29ஆவது வாா்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மைப் பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும். மழைநீா் வடிகால் கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற வேண்டும் என சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். சிறப்புத் தூய்மைப் பணியின் மூலமாக சேகரமாகும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, துணை மேயா் வெற்றிச்செல்வன், வடக்கு மண்டல குழுத் தலைவா் கதிா்வேல், 29 ஆவது வாா்டு உறுப்பினா் ரங்கநாயகி, வடக்கு மண்டல உதவி ஆணையா் மோகனசுந்தரி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.