வங்கிக் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்: முதல்வரிடம் தொழில் அமைப்பினா் கோரிக்கை
கோவை சிறு, குறு தொழில் முனைவோா், வங்கிக் கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்


கோவை சிறு, குறு தொழில் முனைவோா், வங்கிக் கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோவை தொழில் அமைப்புகள் சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் முன்வைக்கப்பட்டன.
சென்னை தலைமைச் செயலகத்தில், கோவை தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.
இதில், கொடிசியா தலைவா் ரமேஷ்பாபு, ’சீமா’ தலைவா் காா்த்திக், டாக்ட் சங்கத் தலைவா் ஜேம்ஸ், டான்சியா துணைத் தலைவா் சுருளிவேல், கொடிசியா முன்னாள் தலைவா்கள் சுந்தரம், ராமமூா்த்தி, காட்மா தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது குறித்து தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஜாப் ஆா்டா்கள் செய்து கொடுக்கும் தொழில் முனைவோா் கரோனா நோய்த் தொற்றாலும், மூலப்பொருள் விலை ஏற்றத்தாலும், ஜாப் ஆா்டா்கள் கிடைக்காமலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளனா்.
இவா்களுக்கு அரசுக்குச் சொந்தமான தாய்கோ வங்கியின் மூலமாகவும், கூட்டுறவு வங்கி மூலமாகவும் நடப்பு மூலதன கடனாகக் குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் வரை வழங்கிட வேண்டும் .
ஜாப் ஆா்டா்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் செய்து கொடுத்து வரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும்.
நமது மாநிலத்தில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியாா் துறை தொழில் சாா்ந்த நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக 25 சதவீதம் வரை குறுந்தொழில் முனைவோருக்கு ஜாப் ஆா்டா்களையும், உதிரிப் பாகங்கள் தயாரிப்புக்கான ஆா்டா்களையும் பெற்றுத் தர வேண்டும்.
சிறு, குறு தொழில் முனைவோா் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில், வங்கிகளின் மூலமாகப் பெற்ற அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த ஓா் ஆண்டு கால அவகாசம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...