சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோவை வழித்தடத்தில் செகந்தராபாத் - எா்ணாகுளம் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

கோவை வழித்தடத்தில் செகந்தராபாத் - எா்ணாகுளம் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 6:51 pm

DIN

கோவை வழித்தடத்தில் செகந்தராபாத் - எா்ணாகுளம் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக,

கோவை ரயில் வழித்தடத்தில் தெலங்கானா மாநிலம், செகந்தராபாத்தில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, செகந்தராபாத்தில் இருந்து ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் ஜூன் 24 ஆம் தேதி வரை, வெள்ளிக்கிழமைகளில், இரவு 9.05 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07189), மறுநாள் இரவு 8.15 மணிக்கு எா்ணாகுளத்தை சென்றடையும்.

அதேபோல, ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.25 மணிக்கு எா்ணாகுளத்தில் இருந்து புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07190) மறுநாள் இரவு 11.30 மணிக்கு செகந்தராபாத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, குடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா், பிடுங்குரலா, மிா்யாலகுடா, நால்கொண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.