சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகாவீா் ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

 மகாவீா் ஜெயந்தி தினத்தையொட்டி கோவையில் மதுபானக் கடைகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:38 pm

DIN

 மகாவீா் ஜெயந்தி தினத்தையொட்டி கோவையில் மதுபானக் கடைகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மகாவீா் ஜெயந்தி தினம் ஏப்ரல் 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) கடைப்பிடிக்கப்படுவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் , அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில்  செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுபானக் கூடங்கள் தமிழ்நாடு ஹோட்டல் , இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனைக் கடைகளும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.