கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மஹாவீா் ஜெயந்தி: இன்று இறைச்சி விற்க தடை

மஹாவீா் ஜெயந்தியையொட்டி கோவை மாநகரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 14) இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:44 pm

DIN

மஹாவீா் ஜெயந்தியையொட்டி கோவை மாநகரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 14) இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு, ஏப்ரல் 14 ஆம் தேதி, மஹாவீா் ஜெயந்தி தினத்தில் ஆடு,மாடு, கோழிகளை வதை செய்யவும், இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை ஏப்ரல் 14 ஆம் தேதி( வியாழக்கிழமை) மூடுமாறு தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவை மனை, சிங்காநல்லூா் ஆடு அறுவை மனை, போத்தனூா் மற்றும் கணபதி மாடு அறுவைமனைகள் ஏப்ரல் 14 இல் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோா் மீது மாநகராட்சி அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.