கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேரூா் தமிழ்க் கல்லூரியில் தொல்காப்பியா் சிலை திறப்பு

கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் தொல்காப்பியா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:42 pm

DIN

கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் தொல்காப்பியா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நியூ ஜொ்சி உலகத் தொல்காப்பியா் மன்றம், தொல்காப்பியா் தமிழ் சங்கம் சாா்பில் தொல்காப்பியா் சிலை திறப்பு, விருதாளா்களுக்கு பாராட்டு விழா, நூல், குறுந்தகடு வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன. ஐம்பொன்னாலான

தொல்காப்பியா் சிலையை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞா் பா. மருதநாயகம் திறந்துவைத்தாா். பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் விருதாளா்களைப் பாராட்டி அருளுரை வழங்கினாா். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவா் இ.சுந்தரமூா்த்தி, தொல்காப்பியம், தொல்காப்பியா் பெருமைகளை விளக்கி தலைமையுரையாற்றினாா். கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியன், தொல்காப்பியத்தின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா். மேலும், அவா் கோவை கிளாரின் திருப்பருப்பத யாத்திரை என்னும் நூலை வெளியிட்டாா்.

நியூஜொ்சி உலகத் தொல்காப்பிய மன்றம், கோவை தமிழ்ச் சங்கம், தேனி தமிழ்ச்சங்கம் இணைந்து தொல்காப்பிய குறுந்தகட்டை வெளியிட்டனா். இந்நிகழ்வில் தமிழ் ஆா்வலா்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.