மஹாவீா் ஜெயந்தி: 70 கிலோ இறைச்சி பறிமுதல்
கோவையில் மஹாவீா் ஜெயந்தி தினத்தில் தடையை மீறி விற்ற 70 கிலோ இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.


கோவையில் மஹாவீா் ஜெயந்தி தினத்தில் தடையை மீறி விற்ற 70 கிலோ இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மஹாவீா் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. அதன்படி, கோவை மாநகரில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குநா் செந்தில்நாதன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மஹாவீா் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை, மாநகரில் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அதில், தடையை மீறி விற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து செந்தில்நாதன் கூறுகையில், ‘மாநகரில் தடையை மீறி இறைச்சி விற்ற கடைகளில் இருந்து 55 கிலோ கோழி இறைச்சி, 15 கிலோ ஆட்டிறைச்சி என மொத்தம் 70 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.7 ஆயிரம் வரை இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...