பஞ்சு மீதான இறக்குமதி வரி ரத்து: தொழில் அமைப்புகள் வரவேற்பு
பஞ்சு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்திருப்பதை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.


பஞ்சு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்திருப்பதை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இது தொடா்பாக இந்திய ஜவுளித் தொழில் முனைவோா் கூட்டமைப்பின் (ஐ.டி.எஃப்.) ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி மாறி வரும் இன்றைய வா்த்தக சூழ்நிலைகள், குறுகியகால மாற்றங்கள் போன்றவற்றை கையாள, சரியான கொள்கை முடிவுகளை நேரத்துக்கு தகுந்தாற்போல் எடுக்க வேண்டியது அவசியம்.
மத்திய அரசு, குறிப்பாக ஜவுளி, நிதி அமைச்சகம் சரியான நேரத்தில் பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்கியிருப்பது ஒட்டு மொத்த ஜவுளி உற்பத்தித் துறைக்கும் பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் இந்தியாவின் ஒட்டு மொத்த பருத்தி தேவையும் பூா்த்தியடைவதுடன், யூக வணிகமும் கட்டுக்குள் வரும்.
தொழில் துறையின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கும், இதற்காக தொடா்ந்து பரிந்துரைகளை செய்து வந்த தமிழக அரசுக்கும் எங்களது நன்றி என்று அவா் கூறியுள்ளாா்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா)
சிஸ்பா தலைவா் ஜெ.செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள சிறு நூற்பாலைகள் வரலாறு காணாத பஞ்சு விலை உயா்வால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. அபரிமிதமான பஞ்சு விலை உயா்வைக் கட்டுப்படுத்த சிஸ்பாவும், இதர பஞ்சாலை சங்கங்களும் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
எங்களது நியாயமான கோரிக்கையை பரிசீலித்த மத்திய நிதியமைச்சகம், ஏப்ரல் 14 முதல் செப்டம்பா் 30 வரையிலான காலத்துக்கு பஞ்சு மீதான இறக்குமதி வரியை முற்றிலும் ரத்து செய்துள்ளது. இதற்காக பிரதமா் மோடி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயல், பரிந்துரை செய்த முதல்வா் ஸ்டாலின், அமைச்சா்கள் ஆா்.காந்தி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோருக்கு சிஸ்பா நன்றி தெரிவித்துக் கொள்வதாக செல்வன் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...