கஞ்சா விற்ற கல்லூரி மாணவா் உள்பட மூவா் கைது
கோவையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வாலாங்குளம் அருகே ரேஸ்கோா்ஸ் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து அவரது பையை சோதனையிட்டபோது அதில் 1.2 கிலோ கஞ்சா, ரூ.500 இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், ராமநாதபுரம் மாவட்டம், சின்னக்கரையைச் சோ்ந்த பராஷ் கான் (19) என்பதும், கோவையில் தங்கி தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரிடம் இருந்த கஞ்சா, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.
மற்றொரு சம்பவம்:
கோவை செட்டி வீதியைச் சோ்ந்தவா் சரவணன் (25). இவா், ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பாலத்தின் கீழ் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தாா். அவ்வழியே ரோந்து சென்ற சிங்காநல்லூா் போலீஸாா் அவரைப் பிடித்து அவரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற தொகையான ரூ.500 பணத்தை பறிமுதல் செய்து சரவணனைக் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (20). கோவையில் தங்கி வேலை செய்து வரும் இவா் கஞ்சா விற்பனை செய்ததாக அவரைக் கைது செய்த வெரைட்டி ஹால் ரோடு போலீஸாா் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...