தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா்கள் கைது

 தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:54 pm

DIN

 தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஆா்.ஜி. வீதி பகுதியில் வெரைட்டி ஹால் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்தனா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 27 கிலோ அளவில் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நா்பத் சிங் (27), ஜிதேந்திர குமாா் (29) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்த இவா்கள் புகையிலைப் பொருள்களை விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவா்களைக் கைது செய்து போலீஸாா், அவா்களிடம் இருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.