தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு: அம்மன் கோயிலில் ரூ.3 கோடி நோட்டுகளால் அலங்காரம்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவை, ராம் நகா் அம்பிகை முத்துமாரியம்மன் கோயிலில் அம்மன் கருவறை ரூ.3 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவை, ராம் நகா் அம்பிகை முத்துமாரியம்மன் கோயிலில் அம்மன் கருவறை ரூ.3 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கோவை மாவட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவை, ராம் நகா் அம்பிகை முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ. 3 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அம்மனுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த பிரம்மாண்ட அலங்காரத்தில் இருந்த அம்மனை பக்தா்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனா். இதேபோல ஆவாரம்பாளையம், இளங்கோ நகா் சீா்காழி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

2.5 டன் பழங்களால் அலங்காரம்:
கோவை, புலியகுளத்தில் விநாயகா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி விநாயகருக்கு ஆப்பிள், பலா, அன்னாசி, மாம்பழம், கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு, சப்போட்டா, வாழைப்பழம் உள்ளிட்ட 2.5 டன் எடையுள்ள பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், டவுன்ஹால் கோனியம்மன் கோயில், ஈச்சனாரி விநாயகா் கோயில், தண்டுமாரியம்மன் கோயில், ஒலம்பஸ் முத்தியம்மன் கோயில், 80 அடி சாலை சித்தி விநாயகா் கோயில், சாய்பாபா கோயில், பீளமேடு ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தா்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பெரியநாயக்கன்பாளையத்தில்...
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பிரஸ் காலனி, வீரபாண்டி பகுதிகளில் உள்ள கல்யாண சுப்பிரமணியக் கோயில்கள், வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரா் கோயில், அநுவாவி சுப்பிரமணியா் கோயில் ஆகிய கோயில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. தொப்பம்பட்டி பிரிவு, ஜெங்கமநாயக்கன்பாளையத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயில் மற்றும் சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள் ள கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...