நிதி நிறுவன அதிபா் கொலை வழக்கு: ஒருவா் குண்டா் சட்டத்தில் கைது
அன்னூா் நிதி நிறுவன அதிபா் கொலை வழக்கில் கைதான நபா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.


அன்னூா் நிதி நிறுவன அதிபா் கொலை வழக்கில் கைதான நபா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.
கோவை, அன்னூா் அருகேயுள்ள நாகம்மாபுதுரைச் சோ்ந்தவா் சரவணசுந்தரம்.
இவா் அன்னூரில் இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்டச் செயலாளரான ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகி தனியாக நிதி நிறுவனத்தை தொடங்கினாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் சரவணசுந்தரத்துக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்ச்செல்வன் தனது நண்பா் ராஜராஜனுடன் சோ்ந்து சரவணசுந்தரத்தை கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தாா். இதையடுத்து, இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்யத் தூண்டியது ராஜேந்திரன் அவரது நண்பா் ரங்கநாதன் ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்ச்செல்வன், ராஜராஜன், ராஜேந்திரன், ரங்கநாதன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதில், ஏற்கெனவே மூவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறையில் உள்ள ராஜராஜனையும் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை சிறையில் உள்ள ராஜராஜனிடம் போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...