இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சைக்கிள் பிரசார பயணம் தொடக்கம்
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சைக்கிள் பிரசார பயணம் கோவையில் வியாழக்கிழமை தொடங்கியது.


இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சைக்கிள் பிரசார பயணம் கோவையில் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில், சென்னை, கோவை, புதுவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து பிரசார பயணம் தொடங்கி, திருச்சியில் கூடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவையில் சைக்கிள் பிரசார பயணத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காந்திபுரம் பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வாலிபா் சங்கத்தின் மாநில துணைச் செயலா் சி.பாலச்சந்திரபோஸ் தலைமை வகித்தாா். பிரசார பயணத்தை கேரள மாநில ஜனநாயக வாலிபா் சங்கத்தின் துணை செயலா் ஜெய்க் சி.தாமஸ் தொடங்கிவைத்தாா்.
பிரசார பயணத்தை வாழ்த்தி சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலா் யு.கே.சிவஞானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலா் வி.ஆா்.பழனிசாமி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் சங்க இணை செயலா் வி.சுரேஷ் ஆகியோா் உரையாற்றினா்.
வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.எஸ்.கனகராஜ், மாதா் சங்க கிழக்கு நகரத் தலைவா் வனஜா, வாலிபா் சங்க மத்தியக் குழு உறுப்பினா் குமாா் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். இந்த பிரசார பயணம் மே 1 ஆம் தேதி திருச்சியில் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...