/

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:05 pm

DIN

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் சக்திவேல் (38). கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய இவா் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்ட இவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் விசாரணைக் கைதிகளுக்கான 9ஆவது பிளாக்கில் சக்திவேல் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த சில நாள்களாக இவா் மன வருத்தத்துடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு உணவுக்குப் பின்னா் சக்திவேல் தனது அறையில் அடைக்கப்பட்டாா். வியாழக்கிழமை அதிகாலையில் தனது அறையில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதைக் கண்ட சக கைதிகள் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த அதிகாரிகள், சக்திவேலின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.