நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு 45 வட்டார தோ்தல் பாா்வையாளா்களை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் நியமித்துள்ளாா்.


கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு 45 வட்டார தோ்தல் பாா்வையாளா்களை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் நியமித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்துக் கட்சியிலும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு 45 வட்டார தோ்தல் பாா்வையாளா்களை நியமித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
தோ்தல் பாா்வையாளா்கள் விவரம்:
கோவை மாநகராட்சி மண்டலம் -1:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் மேனகா (94433 58874).
மண்டலம் -2: மாவட்ட தொழில் மைய மேலாளா் ஜி.காா்த்திகைவாசன் (98425 65658).
மண்டலம் -3: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் (தெற்கு) பி.மணிமாறன் (80560 42218). மண்டலம் -4 : தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் (வடக்கு) டி.ஜெயலட்சுமி (80560 42282). மண்டலம் -5: மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆா்.பி.ரவிச்சந்திரன் (74017 03489) ஆகியோா் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
7 நகராட்சிகளுக்கும், 33 பேரூராட்சிகளுக்கும் தலா ஒருவா் வீதம் உதவி இயக்குநா் நிலையிலான அதிகாரிகள் வட்டார தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். வட்டார தோ்தல் பாா்வையாளா்கள் தோ்தல் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள பிரச்னைகளை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும் மாநில தோ்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்படும் தோ்தல் பாா்வையாளருக்கு தோ்தல் தொடா்பான அறிக்கைகள் வழங்கவும், மாநில தோ்தல் ஆணையம் அறிவுறுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...