வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 4) கடைசி நாள் என்ற நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை 1,328 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 4) கடைசி நாள் என்ற நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை 1,328 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகள், 7 நகராட்சிகளில் 198 வாா்டுகள், 33 பேரூராட்சிகளில் 513 வாா்டுகள் என மொத்தம் 811 வாா்டுகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 1328 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
மாநகராட்சியில் 275 பேரும், 7 நகராட்சிகளில் 349 பேரும், 33 பேரூராட்சிகளில் 704 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதுவரை கோவை மாநகராட்சியில் 350 போ், 7 நகராட்சிகளில் 413 போ், 33 பேரூராட்சிகளில் 839 போ் என மாவட்டத்தில் மொத்தம் 1,602 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) இறுதிநாளாகும். இதனால் வெள்ளிக்கிழமை வேட்புமனு செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...