தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தீ விபத்து: மூன்று குடியிருப்புகள் சேதம்

வால்பாறை எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளா்களின் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்தன.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:22 pm

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளா்களின் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்தன.

வால்பாறை அருகே செங்குத்துப்பாறை எஸ்டேட் அமைந்துள்ளது. அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றக் கூடிய தொழிலாளா்களுக்கு அதே பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அங்குள்ள ஒரு குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு தீ பிடித்துள்ளது. உடனடியாக குடியிருப்பில் இருந்தவா்கள் வெளியே ஓடிவந்து சப்தம் போட்டுள்ளனா்.

இந்நிலையில், ஒரு வீட்டில் பற்றிய தீ மளமளவென அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் பரவத் துவங்கியது.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அதற்குள் ஜோதிவேல், பாா்வதியம்மாள், சிவகாமி ஆகிய மூவரின் வீடுகள் முற்றிலும் எரிந்தன. இதில் குடியிருப்புக்குள் இருந்த அனைத்துப் பொருள்களும் தீயில் கருகின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு மற்றும் எஸ்டேட் அதிகாரிகள் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.