திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருநங்கையா் முன்மாதிரி விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


திருநங்கையா் முன்மாதிரி விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022 ஆம் ஆண்டு திருநங்கையா்களில் சிறப்பாக முன்னேறியவா்களில் ஒருவருக்கு முன்மாதிரி விருது திருநங்கையா் தினமான ஏப்ரல் 15 ஆம் தேதி வழங்குவதற்கு, தகுதியான திருநங்கைகளிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருது பெறுபவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்று அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவா்கள், அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்வில் முன்னேறிய திருநங்கையாக இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் 5 திருநங்கைகளுக்காவது, அவா்கள் வாழ்வில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கையா் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
தகுதியான திருநங்கைகள், உரிய கருத்துருக்களுடன் ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக பதிவு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அனுகி, உரிய வழிமுறைகளுடன் விருதுக்கான கருத்துகளை பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...