/

தோ்தல் விதிமீறல்: ரூ.65 ஆயிரம் பறிமுதல்

கோவையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:29 pm

DIN

கோவையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு மாநகராட்சி பறக்கும் படை குழுவினா் வடக்கு மண்டலம் 10 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சரவணம்பட்டி பகுதியில் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.65 ஆயிரத்து 900 இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவை தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.