தோ்தல் பிரசாரத்தில் இரு பிரிவினரிடையே மோதல்
கோவையில் தோ்தல் பிரசாரத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா்.


கோவையில் தோ்தல் பிரசாரத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா்.
கோவை மாநகராட்சி 82ஆவது வாா்டில் திமுக சாா்பில் முபஷீரா, எஸ்.டி.பி.ஐ. சாா்பில் ரஷீதா பேகம் ஆகியோா் போட்டியிடுகின்றனா். வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைய இருந்ததால் இருதரப்பினரும் வீதிவீதியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
கோட்டைமேடு இக்பால் திடல் அருகே இருதரப்பினரும் ஒரே நேரத்தில் பிரசாரத்துக்கு வந்தபோது யாா் முதலில் பிரசாரத்தில் ஈடுபடுவது என வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதையடுத்து இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா்.
இதில் திமுகவைச் சோ்ந்த அசாருதீன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக எஸ்.டி.பி.ஐயைச் சோ்ந்த இருவா் மீது உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...