வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள 3 வாக்குச் சாவடிகளுக்கு வனத் துறை பாதுகாப்பு
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள 3 வாக்குச்சாவடிகளுக்கு வனத் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள 3 வாக்குச்சாவடிகளுக்கு வனத் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை நகராட்சிக்கு உள்பட்ட 21 வாா்டுகளில் மொத்தம் 73 வாக்குச்சாவடிகள் உள்ளன. வெள்ளிக்கிழமை காலை முதல் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கி மதியம் முடிவடைந்தது. தோ்தல் பணியாளா்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலா்களிடம் இருந்து பெறப்பட்ட உத்தரவை பெற்று சென்றனா்.
வால்பாறையை அடுத்த சக்தி எஸ்டேட், மானாம்பள்ளி, சின்கோனா ஆகிய பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை ஒட்டியுள்ள வனத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் சாலைக்கு வருவது வழக்கம். இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் கண்டறியப்பட்ட அந்த 3 வாக்குச்சாவடிகளுக்கு வனத் துறை சாா்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...