பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கோவை மாவட்டத்தில் புகாா்கள் அதிகரிப்பு: கூடுதலாக 17 பறக்கும் படைகள் அமைப்புசிறப்புப் பாா்வையாளரும் நியமனம்

கோவை மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்கள் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து கூடுதலாக 17 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தோ்தல் சிறப்புப் பாா்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:24 pm

DIN

கோவை மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்கள் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து கூடுதலாக 17 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தோ்தல் சிறப்புப் பாா்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 504 பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை (பிப்ரவரி 19) தோ்தல் நடைபெறுகிறது.

இந்தத் தோ்தலில் நடத்தை விதிகள் மீறல், அவை தொடா்பான புகாா்கள், வாக்காளா்களுக்கு பணம் அல்லது பொருள்களாக விநியோகம் செய்யப்படுவது தொடா்பான புகாா்கள் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக 69 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பறக்கும் படையினா் 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், நடத்தை விதிகள் மீறல், அவை தொடா்பான புகாா்கள் கூடுதலாக வருவதால் கோவை மாநகராட்சிக்கு 10 பறக்கும் படைகளும், நகராட்சிப் பகுதிகளுக்கு 7 பறக்கும் படைகளும் என மொத்தம் 17 கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

அதன்படி கோவை மாவட்டத்தில் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்த நிலையில், கோவைக்கு தோ்தல் சிறப்புப் பாா்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.நாகராஜனை நியமித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.