மாவட்டத்தில் இன்று நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்
கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப்ரவரி 19) நடைபெற உள்ள நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச் சாவடி


கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப்ரவரி 19) நடைபெற உள்ள நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச் சாவடி மையங்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் 778 வேட்பாளா்களும், 7 நகராட்சிகளில் உள்ள 198 வாா்டுகளில் 861 வேட்பாளா்களும், 33 பேரூராட்சிகளில் உள்ள 513 வாா்டுகளில் 1,727 வேட்பாளா்கள் என 811 இடங்களுக்கு 3,366 போ் போட்டியிடுகின்றனா்.
கோவை மாநகராட்சியில் 1290 வாக்குச் சாவடிகளும், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 2,312 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சியில் 181 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 112 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிகளில் 143 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 436 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும், வாக்குப் பதிவு இயந்திரங்கள், படிவங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட 80 வகையான பொருள்கள் வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
உப்பிலிபாளையம் கடவுச்சீட்டு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ராம் நகா் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல பேரூராட்சி, நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்து, அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்றனா்.
இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சிக்கு 1,648 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நகராட்சிகளுக்கு 498 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பேரூராட்சிகளுக்கு 827 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 2,973 எந்திரங்கள் இந்த தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. கூடுதலாக 20 சதவீதம் இயந்திரங்கள் ரிசா்வ் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...