விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோவை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.04% வாக்குப்பதிவு 

கோவை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.04% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image
கோவையில் வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்.
Updated On :19 பிப்ரவரி 2022, 7:42 am

DIN

கோவை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.04% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளிலுள்ள 802 வார்டுகளுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 3 ஆயிரத்து 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள், 7 நகராட்சிகளிலும் சேர்த்து 3 லட்சத்து 30 ஆயிரத்து 265 வாக்காளர்கள், 33 பேரூராட்சிகளில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 207 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 41 உள்ளாட்சி அமைப்புகளிலும் 23 லட்சத்து 41 ஆயிரத்து 883 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காரணமாக கோவை மாநகரில் உள்ள சாலைகள், வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பல வாக்குச்சாவடிகளில் 200 மீட்டர் தொலைவுக்கு வெளியே அரசியல் கட்சியினர் திரளாகக் கூடி கையில் தங்கள் கட்சிகளின் சின்னங்களை வைத்துக் கொண்டு வாக்களிக்கச் செல்பவர்களிடம் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி ஆதரவு திரட்டி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் 31 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

Story image

நகராட்சிகளில் 24.09 சதவீத வாக்குப் பதிவும், மாநகராட்சியில் 17.32 சதவீத வாக்குப் பதிவும் நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 21.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவை நிர்மலா கல்லூரியில் காலை 7.25 மணியளவில் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி, சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், 67 ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

Story image

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், கோவை பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கோவை மாவட்டத்தில் வாக்குக்கு பணம், பரிசுப் பொருள்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், சிறப்புப் பார்வையாளராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார். மேலும், 86 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் பாதுகாப்புப் பணியில் அதிரடிப் படையினர் உள்ளிட்ட 4,500 போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.