மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:35 pm

DIN

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட, டாப்சிலிப் பகுதியில் வளா்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில், 27 வளா்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கலீம், அரிசிராஜா உள்ளிட்ட யானைகள் இந்த முகாமில் உள்ளன. டாப்சிலிப் முகாமில் உள்ள நல்ல உடல் தகுதி கொண்ட கலீம் போன்ற யானைகள் கும்கி ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் நல்ல உடல் நிலை உள்ள பெண் யானைகள் சவாரிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் வனப் பகுதி மேம்பாடு, குறும்பு செய்து வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் ஒவ்வொரு ஆண்டும் யானைகளை மகிழ்விக்கும் வகையிலும், யானைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் யானை பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக யானை பொங்கல் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு யானை பொங்கல் விழாவை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, விதிமுறைகளுக்கு உட்பட்டு டாப்சிலிப்பில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

யானை பொங்கல் விழாவில், மலைவாழ் மக்கள் தங்கள் முறைப்படி பொங்கல் வைத்து வனத் துறையினருடன் இணைந்து யானைகளுக்கு பிடித்தமான கரும்பு, வெல்லம் மற்றும் பல்வேறு வகையான பழவகைகளை வழங்கினா். அதற்கு முன்பாக யானைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பொங்கல் விழாவில் பங்கேற்ற யானைகள் துதிக்கையைத் தூக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை வனச் சரக அலுவலா் காசிலிங்கம் உள்ளிட்ட வனத் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.