கரோனா: இரண்டாவது இடத்தில் கோவை ஒரே நாளில் 3,390 பேருக்கு தொற்று உறுதி
கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது


கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் முதலிரண்டு இடத்தில் இருந்தன. இந்நிலையில் வியாழக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த் தொற்று பாதிக்கப்பட்டதால் கோவை மாவட்டம், செங்கல்பட்டை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கோவையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 3,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 530 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,189 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 2 லட்சத்து 57 ஆயிரத்து 64 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 15 ஆயிரத்து 926 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...