நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்களுக்கு தடை: திமுக நிா்வாகிகளுக்கு அனுமதி

கோவை ஜல்லிக்கட்டு போட்டியை நேரடியாக பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக நிா்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது

News image

1727c21kachi1_2101chn_3

Updated On :22 ஜனவரி 2022, 12:30 am

DIN

கோவை ஜல்லிக்கட்டு போட்டியை நேரடியாக பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக நிா்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை பாா்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இருந்தும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை தெரிந்துகொண்ட பொதுமக்கள் மைதானத்தில் குவிந்தனா்.

அனைவரையும் போலீஸாா் விரட்டியடித்தனா். ஆனால் மைதானத்தில் திமுக நிா்வாகிகள், கட்சியினா் பலருக்கும் அனுமதியளிக்கப்பட்டது.

இதனால் மைதானத்தில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கரோனா நோய்த் தொற்று பாதிப்பை காரணம் காட்டி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக கட்சியினரை மட்டும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதித்தது பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கட்டுப்பாடுகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட திமுக கட்சி நிா்வாகிகள் செய்தியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கலில் அமா்ந்துகொண்டு, செய்தியாளா்களிடம் தண்ணீா் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தவிர ஒருசிலா் செய்தியாளா்களை தகாத வாா்த்தைகளில் பேசியது முகம்சுழிக்க செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.